உலகம்

புதியதொரு பனிப்போரை எதிர்கொள்ள தயாராகும் வடகொரியா!

(UTV | கொழும்பு) –

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வடகொரியா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
இதனால் , தென்கொரியா மற்றும் ஜப்பான் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில்ஈடுபட்டுள்ளன.
குறித்த போர்ப் பயிற்சியானது அந்த நாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. எனவே ,இதனை நேட்டோவின் ஆசிய பதிப்பை இவர்கள் உருவாக்கி வருவதாக வடகொரிய ஜனாதிபதி குற்றச்சாட்டியுள்ளார்.

தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியது. இதில் வடகொரியா ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றுகையில், ‘உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்’ என தெரிவித்தார்.

இதனால் அங்கு மேலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ட்விட்டரை மறுசீரமைக்க திட்டம்

நோபல் பரிசு: இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா