உள்நாடு

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து இலங்கையின் எதிர்கட்சி தலைவரும், சிங்கள பௌத்த அரசியலும், ஊடகங்களும் சர்வதேச விசாரணையை கோரவேண்டும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க தமிழ் செயற்பாட்டு குழு உட்பட தமிழ் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என இலங்கையின் எதிர்கட்சி தலைவர் விடுத்துள்ள வேண்டுகோளை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேவேளை இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலின் ஊடகங்களின் பல வருட கனத்த மௌனங்கள் குறித்தும் புலம்பெயர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

2009இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இலங்கை ஆட்சியாளர்களிற்கு உள்ள தொடர்புகள் குறித்து சனல் 4 வெளியிட்ட வீடியோ குறித்து இலங்கையின் பௌத்த சிங்கள அரசியலும், ஊடகங்களும் வெளியிட்ட வீடியோ குறித்தும் கனத்த மௌனத்தை பின்பற்றி என புலம்பெயர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. 14 வெளிநாடுகளை சேர்ந்த 42 பேர்கள் உட்பட 269 அப்பாவி மக்களின் உயிர்களை பறித்தெடுத்த ஈவிரக்கமற்ற பயங்கரவாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணையை கோருவதில் எதிர்க்கட்சி தலைவர் வெளிப்படையாக செயற்பட்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கை ஆட்சியாளர்களின் உயர்மட்டத்தினர் தொடர்புபட்டிருப்பதால் உள்ளக விசாரணைகளின் நம்பகதன்மையை எதிர்கட்சி தலைவர் நிராகரித்துள்ளார் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு எனில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 700000 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 146679 பேர் காணால்போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளமை முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கத்தின் கணக்கெடுப்பு குறித்தும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியல் மற்றும் ஊடகங்கள் எவ்வாறு மௌனமாயிருக்க முடியும் என புலம்பெயர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கை ஆட்சியாளர்களின் உயர்மட்டத்தினர் தொடர்புபட்டிருப்பதால் உள்ளக விசாரணைகளின் நம்பகதன்மையை எதிர்கட்சி தலைவர் நிராகரித்துள்ளார் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அவ்வாறு எனில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 700000 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக 146679 பேர் காணால்போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளமை முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கத்தின் கணக்கெடுப்பு குறித்தும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியல் மற்றும் ஊடகங்கள் எவ்வாறு மௌனமாயிருக்க முடியும் என புலம்பெயர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. எதிர்கட்சி தலைவரும் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலும் நீதியில் சமத்துவம் குறித்து நம்பிக்கை கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு சர்வதேச விசாரணைகளை கோருவதுடன் நிற்காமல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த நம்பகதன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைகளை கோருவதன் மூலம் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

அவ்வாறான வேண்டுகோளை அவர்கள் விடுத்தால் அது இலங்கையின் துருவமயப்படுத்தப்பட்ட இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் சாதகமாக விடயமாக விளங்கும் என அவை தெரிவித்துள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

சீரற்ற காலநிலை : அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை