உள்நாடு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை – மலையக மக்கள் முன்னணி சந்திப்பு.

(UTV | கொழும்பு) –

நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் மலையக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலுக்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை மரியாதை நிமித்தம் மலையக மக்கள் முன்னணி சார்பில் சந்தித்தோம்.

இந்த சந்திப்பின்போது மலையக அபிவிருத்தி சம்பந்தமாக மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் பல விடயங்களை எடுத்து கூறினோம். அத்தோடு மலையக சமூதாயத்தின் நிலையையும் பற்றியும் விரிவாக தெளிவுபடுத்தினோம். அதேபோல நாட்டினுடைய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதில் விசேடமாக நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல எனவும் அவருக்கு வலியுறுத்தி கூறினோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இவ்வாறான சட்டமூலம் இலங்கைக்கு ஏற்றதல்ல. ஜனநாயக நாட்டில் இவ்வாறான சட்டமூலம் கொண்டு வருவது அடக்குமுறைகளை ஏற்படுத்துவதாகும். அதாவது ஊடக அடக்குமுறை தொழிற்சங்கங்கள் அடக்கு முறைகள், அதே போல மக்களுக்கு துன்பங்களை இந்த சட்டம் மூலம் ஏற்படுத்தும்.

இந்த சட்டமூலம் முழு அதிகாரமும் ஜனாதிபதியிடம் கொடுக்கப்படும் போன்ற பல்வேறு விடயங்களை அவரிடம் எடுத்துரைத்தோம். அவரும் சிலவற்றை ஏற்றுக்கொண்டார். அதற்கு அவர் முழுமையான பதில் கூறாவிட்டாலும், இந்த நாட்டிலே இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு இவ்வாறு நடைபெறுவது வேதனைக்குரிய விடயம் என்பதை கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

டீகோ மரடோனா காலமானார்

ஷானி அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு முன்னிலையில்