(UTV | கொழும்பு) –
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேசம், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேசம், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பிட்டபெத்தர பிரதேசம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து மழை பெய்தால், மண்சரிவு, பாறை சரிவு, நிலம் தாழிறக்கம் குறித்து அவதானமாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அப்பகுதி மக்கள் மேலும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கிடையில், 6 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகள்,
காலி மாவட்டம் – நெலுவ, எல்பிட்டிய
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – வலஸ்முல்ல
களுத்துறை மாவட்டம் – அகலவத்தை, வல்லாவிட்ட
கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல
மாத்தறை மாவட்டம் – முலடியன, அதுரலியா
இரத்தினபுரி மாவட்டம் – கலவான, கொலொன்ன, எஹெலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්