உள்நாடு

பாதுகாப்பு அமைச்சு சற்றுமுன் வௌியிட்ட அறிக்கை!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர்கள்/ நிறுவனங்களின் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 01 ஒக்டோபர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
தேவையான விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் இணையதளமான www.defence.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் 31 டிசம்பர் 2023க்குப் பின் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். 2024/2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் 01.10.2023 முதல் 31.12.2023 வரை மேற்கொள்ளப்படும். இக்காலக்கெடுவிற்குப் பின் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரிஷாத் – ரியாஜ் 90 நாட்கள் தடுப்பு காவலில்

அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானம்

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!