வகைப்படுத்தப்படாத

புகையிரத பயணச்சீட்டு பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –

பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொரோனா தொற்று காலத்தில் புகையிரத பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக பயணச்சீட்டு இல்லாமல் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மருதானை புகையிரத நிலையத்தில் மாத்திரம் பயணச்சீட்டு பெறாமல் பயணித்த பயணிகளிடமிருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணச்சீட்டு பெறாமல் புகையிரதத்தில் பயணித்த 72 பயணிகளிடமிருந்து இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்

Two Chinese arrested for credit card forgery