உள்நாடு

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய மக்களின் மனநிலை மாற வேண்டும் – டயனா கமகே.

(UTV | கொழும்பு) –

உள்நாட்டு உணவு கலாசாரம் இன்னும் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கிறது. இதனை அறிமுகப்படுத்தாதவரை சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அத்துடன், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய எமது மனநிலை மாறவேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சுற்றுலா இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டுக்கு அதிகம் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையே சுற்றுலாத்துறையாகும். என்றாலும் கடந்த 5 வருடங்களில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகள் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. என்றாலும் தற்போது நாடு படிப்படியாக ஸ்திரநிலைக்கு வருவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது.

அத்துடன், ஒருமனிதனுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவது 3 விடயங்களாகும். அதில் உணவு, பானம் பிரதானமானதாகும். அதன் பிறகு தங்குவதற்கு வீடு மற்றும் ஆடை. அந்த வகையில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வரும்போது அவர்கள் பல்வகையான உணவுவகைகளை உற்கொள்ள ஆசைப்படுவார்கள். எமது நாடுக்கு என உணவு கலாசாரம் ஒன்று இருக்கிறது. ஆனால் எமது உணவு கலாசாரம் இதுவரை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படாமல் இருக்கிறது. எமது உணவு கலாசாரம் சுற்றுலாத்துறைக்கு அறிமுகப்படுத்தாதவரை எமது சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அதேபோன்று, எமது நாட்டில் இருக்கும் ஹோட்டல் பாடசாலைகளின் கல்வி பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்ல வேண்டும். ஹோட்டல் தொழிற்சாலை தொடர்பான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. ஹோட்டல் பாடசாலைகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். அதேபோன்று சுற்றுலா பிரதேசங்களில் இரவு வியாபார நிலையங்கள் அதிகரிக்கப்படவேண்டும். ஆனால் எமது நாட்டில் இரவு 10 மணியுடன் வியாபார நிலையங்கள் மூடப்படும் நிலையே இருந்து வருகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

அத்துடன், நாட்டில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய நாட்டு மக்களின் மன நிலை மாறவேண்டும். பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன். ஆனால் எமது பாராளுமன்றத்தில் தற்போது இருப்பவர்களில் ஒரு சிலர் பாராளுமன்றத்தில் இருப்பதைவிட வீடுகளில் இருப்பது நல்லது. அதனால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்ய தேவையான வழிகாட்டல்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றமே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு தெளிவாகிறது

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்!