உள்நாடு

திருகோணமலையில் நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு!

(UTV | கொழும்பு) –

திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கட்டளையாளர்களுக்கான நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வொன்று பிரதேச செமலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் போதை பொருள் பாவனையால் ஏற்படும் பாதக விளைவுகள் மற்றும் உளவளம் தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்பட்டது. வளவாளராக கப்பல் துறை சுதேச ஆதார வைத்தியசாலையின் சமுதாய அபிவிருத்தி வைத்தியர் டொக்டர் மல்சா ஜெயரட்ண கலந்து சிறப்பித்தார். இதனை சமூக சேவைகள் கிளையும் சமுதாய அபிவிருத்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர மற்றும்
சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

     

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரயில் சேவையில் பாதிப்பு

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்

வனஜீவராசி அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது