(UTV | கொழும்பு) –
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதியும் அதன் பின்னர் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්