(UTV | கொழும்பு) –
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவர் ஸ்மிரிதி மந்தனாவை பார்க்க 1270 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளார் அவருடைய தீவிர சீன ரசிகர் ஒருவர். சீனாவில் கிரிக்கெட் பிரபல்யம் இலாததால் ரசிகர்கள் கூடவில்லை. , சீன ரசிகர் ஒருவர் “மந்தனா ஒரு கடவுள்” எனும் பதாகையை ஏந்திக்கொண்டு போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதைக் கண்ட இந்திய ஊடகங்கள் ஆச்சரியத்தில் அவரை மொய்க்கத் தொடங்கியுள்ளனர். அவரது பெயர் வெய் ஜுன்யு ட்ரூ. 25 வயது இளைஞரான அவர் பீஜிங்கில் இருந்து 1270 கிலோமீற்றர் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் ஹாங்சோ நகருக்கு வந்திருக்கிறார். மந்தனாவை பார்க்க மட்டுமே அவர் இவ்வளவு தூரம் வந்ததாக கூறினார்.
சீனாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு இல்லாத நிலையில் யூரியூப்பில் கிரிகெட் போட்டிகளை பார்ப்பதாகத் தெரிவித்தார். சீனாவில் மந்தனா விளையாடுகிறார் என்பதை அறிந்து ஒரு நாள் இரவு முழுவதும் பயணம் செய்து வந்து மந்தனாவை நேரில் கண்டு ரசித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්