விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற தகுதிகான் சுற்றின் முதலாவது போட்டியில் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணிகள் மோதின.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் இரு வீரர்களுக்கு கொவிட் தொற்று

இலங்கை சுற்றுப்பயணத்தில் பயமேன்

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை