உள்நாடு

நீர் கட்டண பட்டியலில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்குவதற்குப் பதிலாக இணையத்தில் இலத்திரனியல் கட்டண பட்டியல் முறையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாம் 2023 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளருக்கு கட்டண பட்டியலை செலுத்தும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சோதனை அடிப்படையில், கொழும்பு தெற்கு நகரம், கண்டி தெற்கு நகரம், திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய 4 பிராந்திய அலுவலகங்கள் தொடர்பில் இணையவழி இலத்திரனியல் கட்டண முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது. 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையில் இதை விரிவுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். அதனால் எந்த பயமும் வேண்டாம். முன்பை விட வேகமாகவும் துல்லியமாகவும் இதனூடாக கட்டண பட்டியலை வழங்கலாம். 1939 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஸ்மார்ட் கைப்பேசி இல்லாத ஒருவருக்கு அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பட்டியலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா – UAE அறிவிப்பு

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – நாமல்

editor

பெரியநீலாவணைப் பகுதிகளில் அதிகரிக்கும் மணல் கடத்தல் சம்பவங்கள்!