உள்நாடு

காயங்களுடன் தாக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரின் சடலம் ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் சடலம் நேற்று திங்கட்கிழமை (25) ஒன்பது மணிக்கு பின்னர் குறித்த சந்தியில் பொது மக்களால்  அவதானிக்கப்பட்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க புஸ்பராசா தினேஸ்கரன் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து