(UTV | கொழும்பு) –
தேசிய கணக்காய்வு அலுவலகம் செப்டம்பர் 18 ஆம் திகதி வெளியிட்ட புதிய கணக்காய்வு அறிக்கையின்படி, சமுர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களை கொண்ட 2,000 சங்கங்களில் நடந்ததாகக் கூறப்படும் 107 மோசடிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த செயற்பாடுகளினால் இருபத்தி மூன்று கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, 2014 ஜனவரி 03ம் திகதி முதல் 2015 ஜூலை இறுதி வரை இடம்பெற்றுள்ள 15 மோசடிகளில் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேலான பணமும், 2019 முதல் பெப்ரவரி 2020 வரையான காலப்பகுதியில் 92 மோசடிகளில் பதினேழு கோடி ரூபாய்க்கு மேல் மோசடிகளில் இடம்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிநபர்கள் வேண்டுமென்றே செய்யும் தவறுகள் மற்றும் நிதி மோசடிகளை குறைக்க எதிர்பார்த்தாலும், அந்த மோசடிகளில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்பதையும் கணக்காய்வு அறிக்கை காட்டுகிறது. இந்நிலையில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්