(UTV | கொழும்பு) –
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் டோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த கென்யா பிரஜை, 03 பிஸ்கட் பெட்டிகளில் அடைக்கப்பட்ட 04 கிலோ கிராம் கொக்கேய்னுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொக்கேயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්