உள்நாடு

தேங்கி நிற்கும் கழிவு நீர்- சுகாதார சீர்கேட்டினால் மக்கள் அவதி.

(UTV | கொழும்பு) –

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் பாரிய சுகாதார சீர்கேடு இடம்பெறுவதாக அங்குவாழும் குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் 18 வருங்களாக முறையான வடிகான் இன்மையால் சமையலறைக் கழிவுநீர், குழியலறைக் கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவுகள் போன்றவை வீட்டுத்திட்டத்தின் பின்புறங்களில் தேங்கிநின்று பாரிய அளவிலான நுளம்புகளைப் பெருக்கி டேங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

மக்கள் செறிந்து வாழும் இந்த வீட்டுத்திட்டத்திலும் அதனை அண்டிய குடியிருப்புகள், பாடசாலை, வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் போன்ற அரச நிறுவனங்களிலும் பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாளர்கள், அரச அதிகாரிகள் என பலரும் வாழ்வதால் தேங்கிநிற்கும் கழிவுநீரால் மாத்திரமன்றி பருவமழை ஏற்படுகின்ற காலத்தில் தேங்கி நிற்கும் மழைநீராலும் இலகுவில் நோய்த் தொற்று ஏற்பட்டு இறக்கும் அவல நிலையும் காணப்படுகின்றது.

காலத்துக்கு காலம் அரசியல்வாதிகள் பலரும் அதிகாரிகளுடன் வந்து தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் இந்தப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து தருவதாக வாக்குறுதியளித்து செல்கிறார்கள் ஆனால் நாங்கள் இவ்வாறான நெருக்கடியான வாழ்விலிருந்து மீண்டபாடில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ? நாடுதிரும்பும் ஜனாதிபதிக்கு அதிகரிக்கப்பட்ட அதிரடி பாதுகாப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்

பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்