விளையாட்டு

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதி!

(UTV | கொழும்பு) –

சீனாவின் ஹங்ஸோவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.ஆசிய மகளிர் இருபது 20 கிரிக்கெட் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை இன்று எதிர்த்தாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தங்கப் பதக்கமும் தோல்வி அடையும் அணிக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைக்கும். எனவே இந்தியாவும் இலங்கையும் ஏதேனும் ஒரு பதக்கத்தை வென்றெடுப்பது உறுதி.

சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் காவிஷா டில்ஹாரி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுபெடுத்தாடிய இலங்கை 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா (18 ஆ.இ.), அனுஷ்கா சஞ்சீவனி (15), அணித் தலைவி சமரி அத்தபத்து (14) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மற்றைய அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 8.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான வெண்கலப் பதக்கத்தை தீர்மானிக்கும் போட்டி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தென் கொரியாவின் இன்ச்சொன் 2014 ஆசிய விளையாட்டு விழாவுக்கு பின்னர் இலங்கைக்கு இம்முறை பதக்கம் கிடைக்கவுள்ளது.
2014இல் ஆடவர் கிரிக்கெட்டில் தங்கப் பதக்கமும் மகளிர் கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கமும் இலங்கைக்கு கிடைத்தது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

அவிஷ்கவுக்கு சத்திரசிகிச்சை

100 கோடி கிரிக்கெட் ரசிகர்களில் 90 சதவிதம் பேர் இந்தியாவில் உள்ளனர்