உள்நாடு

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்த வேலைத்திட்டம்!

(UTV | கொழும்பு) –

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து உணவகங்களையும் பரிசோதிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலை உணவகக் கொள்கை முழுமையான சட்ட ஆவணமாக இல்லாவிட்டாலும், சிற்றுண்டிச்சாலைகளில் மாணவர்களுக்கு தேவையற்ற உணவுகள் வழங்கப்படுவதால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைக் காணலாம். சிற்றுண்டிச்சாலைகளில் விற்கப்படும் உணவுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்காத உணவுகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் எந்தெந்த உணவுகளை விற்கலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாடசாலை சிற்றுண்டிச்சாலை கொள்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனை மீறி செயற்பட்டால் உணவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது பிரச்னையாக இருந்தாலும், பாடசாலை மாணவர்களின் உடல் நலனில் பிரச்னை ஏற்படுத்தும் எந்த விடயத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எதிர்காலத்தில் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்படும்.” என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொது மக்கள் தேவைக்காக

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு