உள்நாடு

பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறு – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.

(UTV | கொழும்பு) –

அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) சட்டத்தரணிகள் சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. BASL இன் பார் கவுன்சில் நேற்று நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இவ்விரு சட்டமூலங்களையும் தொடர வேண்டாம் என்ற முடிவை மேற்கொண்டது.

குறித்த இரண்டு சட்டமூலங்களும் மக்களின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கிறது என்றும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஒருமனதாக தீர்மானித்தது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உரிய ஆலோசனையின்றி இரண்டு சட்டமமூலங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, BASL உட்பட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் அர்த்தமுள்ள கலந்தாலோசனைகளை மேற்கொள்ளுமாறும், சமூகத்தின் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அத்தகைய சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு முன்னர் அவர்களின் யோசனைகளைக் கவனத்தில் கொள்ளுமாறும் சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. இது தொடர்பான ஊடக அறிக்கையை BASL தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்