உள்நாடு

குறைவடையும் பாணின் விலை!

(UTV | கொழும்பு) –

பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ” ஒரு பாணின் விலையை 100 ரூபா அல்லது அதற்கும் குறைவாக பேணுவதே தமது சங்கத்தின் ஒரே நம்பிக்கை. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் முயற்சியின் கீழ் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் பாணை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கம் தலையிட்டால் நிச்சயமாக 100 ரூபாவிற்கு ஒரு பாணை வழங்குவதுடன் ஒரு பன்னின் விலையில் 10 அல்லது 15 ரூபாவை குறைக்க முடியும் ” என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

வனஜீவராசி அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

நாடு திரும்புவோரில் தொற்றில்லாதவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதி