(UTV | கொழும்பு) –
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனுடன் இருக்கும் புகைப்படமொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ட்விட்டரில் வெளியிடப்பட்ட குறித்த படம், நியூயோர்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடருக்கு சென்ற அதிகாரபூர்வ தூதுக்குழுவில் அலி சப்ரியின் மகன் ஏன் அங்கம் வகிக்கிறார் என்ற பொதுமக்களின் கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
முன்னதாக, நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சேர்க்கப்பட்டனர் என்று பொது மக்களால் அரசாங்கம் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள் தங்களின் நெருங்கிய உதவியாளர்களுக்கு இப்படி வாய்ப்பை கொடுப்பது வழக்கமாகிவிட்டதென பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தற்போது, முக்கிய இராஜதந்திர பதவிகள் கூட, தொழில் அல்லாத இராஜதந்திரிகள் அல்லது அரசியல்வாதிகளின் பிள்ளைகளால் வகிக்கப்படுகிறது.
அவர்கள் திறமையான இலங்கையர்களுக்கு ஏணியில் ஏறுவதற்கான வாய்ப்பை மறுக்கின்றனர் எனவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්