உள்நாடு

நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!

(UTV | கொழும்பு) –

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2008, 2009 க்கு இடையில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை நீதி வழங்க அதிகாரிகள் தவறியுள்ளதாக தெரிவித்தே இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதன் மூலமோ, அரசாங்க அதிகாரிகளுடன் ஈடுபடுவதன் மூலமோ அல்லது கிடைக்கக்கூடிய வேறு வழிகளிலோ சர்வதேச சமூகம் இந்த வழக்கை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கும், அவர்களது சட்டச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த உதவுமாறு அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து, வழக்கின் தொடர்ச்சியான மற்றும் விரைவான விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறும் அதற்கு ஆதரவை வழங்குமாறு காணாமல் போனவர்களின் குடும்பங்கள் ஐ.நா மற்றும் இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இப்போது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் என்றும், அவர்கள் வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. நீதிமன்ற வழக்கு சுமார் 15 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல் விசாரணைக் குழுவில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை சமர்ப்பித்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி இருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை – அமெரிக்க தூதுவர்

editor