உலகம்உள்நாடு

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை.

(UTV | கொழும்பு) –

சர்வதேச மனித உரிமை உரிமை சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொறுப்பபுக்கூறச்செய்யவேண்டும் என வலியுறுத்தும் கடிதமொன்றை அமெரிக்க காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனிபிளிங்கெனிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

இலங்கையில் சித்திரவதை உட்பட சர்வதேச குற்றங்கள் என கருதப்படக்கூடிய குற்றங்கள் உட்பட சர்வதேச சட்டம சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவை மீறப்பட்டமை தொடர்பில் இலங்கையில் போதிய நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாதமை குறித்;து இந்த கடிதத்தை எழுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை அனுபவிக்கின்றனர் இது அந்த நாடு எதிர்கொள்ளும் அரசியல் சமூக நெருக்கடிக்கு காரணம்- இது மனித உரிமைகளை ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் அமெரிக்காவின் கொள்கைகளிற்கு முரணாணது இதனை நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல் -90 பேர் பலி

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிப்பு