(UTV | கொழும்பு) –
கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கினால், மே 9ஆம் திகதி எரிக்கப்பட்ட பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “கிட்டத்தட்ட 50 தனியார் பஸ்கள் முற்றிலுமாக நாசமாகியுள்ளன. மேலும் 50 பேருந்துகள் பகுதியளவில் நாசம் அடைந்தன. இவற்றுக்கு காப்புறுதி மூலம் கிடைத்த தொகை போதாது. பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவாவது இழப்பீடு பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால் பேருந்து உரிமையாளர்களுக்கு அது கிடைக்கவில்லை. தலா 10 மில்லியன் ரூபாய் என்றாலும் 50 பஸ்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாய் வழங்குவது ஒன்றும் பெரிய தொகை அல்ல.” என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්