(UTV | கொழும்பு) –
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை தொடர தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கை அணையின் தலைவர் பதவியில் இருந்து தசுன் சானகவை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்புக்களில் எதிர்ப்புகள் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தசுன் ஷானக, வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்று, தனது அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையால் தேசிய தரப்படுத்தலில் இலங்கை அணியை முன்நகர்த்த முடிந்தது என இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්