உள்நாடு

பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஹஷிஸ் போதைப்பொருள்!

(UTV | கொழும்பு) –

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் ஒருதொகை ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 16.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளையே ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

வென்னப்புவ, ஹலவத்த பகுதியில் உள்ள முகவரிக்கு குறித்த பொதி அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு கிலோ 98 கிராம் எடையுடைய ஹஷிஸ் இருந்ததாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த முகவரி தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது முகவரி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஹஷிஸ் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம் சிறை – பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை

editor

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு