(UTV | கொழும்பு) –
நேற்றைய தினம் சாய்ந்தமருது அல் ஹசனாத் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் அரச உயர்மட்டங்களை தொடர்புகொண்டு கடலரிப்பின் அகோரம் தொடர்பில் விளக்கி கடலரிப்பை தடுப்பது தொடர்பில் உள்ள அவசர நிலையை விளக்கி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இன்று காலை நகர திட்டமிடல் அமைச்சில் சாய்ந்தமருது கடலரிப்பை தடுப்பது தொடர்பான உயரமட்ட கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க, இராஜங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ, ஜனாதிபதி ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான நிமால் லான்ஸா பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், சாய்ந்தமருது பிரதேச செயலாளர், சாய்ந்தமருது அரசியல் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්