உள்நாடு

உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

உயர்தரப் பரீட்சை(2023) ஒத்திவைக்கப்படுவதனால் சாதாரணதரப் பரீட்சைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ் விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்வுகளை மீண்டும் எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது எனவும் மீண்டும் மீண்டும் வரும் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் நேரம் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்திய கல்லூரி!

மேலும் 200 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!