உள்நாடு

பரிசோதனை நிபுணர்கள் இன்மையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நெருக்கடி!

(UTV | கொழும்பு) –

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ‘பெட் ஸ்கேன்’ (PET) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படும் என அரசாங்க மரபியல் விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்ம விக்கிரம தெரிவித்தார்.

இந்த இயந்திரங்களைக் கொண்டு பரிசோதனை செய்யும் நிபுணர்கள் ஓய்வு பெறுவதும், நாட்டை விட்டு வெளியேறுவதுமே இந்த நிலைமைக்கு காரணம். இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ‘லினிட்டர் எக்ஸிலரேட்டர்’ இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

78 இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கையை நோக்கி யாத்திரை

விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை