(UTV | கொழும்பு) –
மஸ்கெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மவுஸ்சாக்கலை நீர் தேக்க பகுதியில் உள்ள காட்டு மஸ்கெலியா தேயிலை உற்பத்தி நிலையம் அருகில் உள்ள வீட்டில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்று வருகிறது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார விற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து
நேற்று 04 ம் திகதி இரவு அந்த இடத்தை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார உதவி அதிகாரி நுவான், சார்ஜன் ரெங்கரன், சார்ஜன் ஆரிய ரத்னா, பொலிஸ் நவஷாட் ,புத்திரன, ரத்நாயக்க ஆகிய பொலிசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த வீட்டில் உள் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொலிசார் கைது செய்யப்பட்டனர். கைது செய்ய பட்டவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளனர்.
அந்த குடியிருப்பு உள் பகுதியில் உள்ள அறை ஒன்றில் சுமார் 40 அடி ஆழத்தில் பாரிய குழி உள்ளது எனவும், அந்த குழியில் இருந்து எடுக்கப்பட்ட இல்லங்கள் மற்றும் மாணிக்க கற்கள் அகழ்விற்க்கு உபயோகித்த ஆயுதங்கள் கைபற்றி உள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්