வகைப்படுத்தப்படாத

ஒரு கோடி பெறுமதியான ஹேரோயினுடன் நபரொருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – முந்தலம் – சின்னப்பாடு பிரதேசத்தில் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹேரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீன்பிடி தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டில் இருந்து புரவுன்சுகர் வகையான இந்த ஹேரோயின் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன் நிறை 1.05 கிலோ கிராம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு

நாட்டையே உலுக்கிய கோர விபத்து

Showers & winds to enhance over south-western areas