உலகம்விளையாட்டு

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

(UTV | கொழும்பு) –

ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார்.

சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற தமது அணி வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதனைத் தொடர்ந்து அவர் மீது கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற சிகையலங்கார நிபுணரான ஏஞ்சல்ஸ் பெஜார், தேவாலயத்திற்குள் இருப்பதாக அறிக்கைகள் கூறும் நிலையில், அவர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனது 63 ஆவது விண்கலத்தை அனுப்பிய நாசா!

உலக சந்தையில் எகிறும் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை

காஸாவின் கொடூரமான குற்றங்களுக்குய முற்று புள்ளி – சர்வதேச சமூகத்திற்கு சல்மான் அழைப்பு