உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் செப்டெம்பரில்..!

(UTV | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த அடிப்படை உரிமை மனுக்களுக்கு பல தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த மனுக்களை விசாரிக்க பட்டியலிட்டுள்ளது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக மீதமுள்ள 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலும் கால அவகாசத்தை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விற்பனை நிலையத்தில் வெளியான நச்சு புகையால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

மின்சார சபையின் நிலக்கரி கையிருப்பு ஜூன் மாதம் வரையே

200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது