(UTV | கொழும்பு) –
தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இந்த பிணை உத்தரவை வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி அமீர் பாருக் அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி, இன்று தீர்ப்பை அறிவித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை கடந்த 22ம் திகதி விசாரணைக்கு பின், 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්