(UTV | கொழும்பு) –
இலங்கையில் நிலவிவரும் வெப்பமான சூழ்நிலையின் காரணமாக குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, பசியின்மை போன்ற நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டார்.
மேலும், நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகள் மற்றும் கொதித்து ஆரிய நீர் ஆகியவற்றை இடையிடையே கொடுப்பது நல்லது.
சில குழந்தைகள் இந்நாட்களில் வெப்பம் தாளாமல் தூக்கம் வராமல் சிரமப்படுதல், காரணமின்றி அழுதல், காய்ச்சல் இல்லாவிட்டாலும் அதிக உடல் வெப்பம் காரணமாக அதிகமாக வியர்த்தல் போன்ற பாதிப்புக்களை எதிர்நோக்குவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வெப்பமான பிரசேங்களில் வாழ்பவர்கள் தோல் சம்பந்தமான பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள காலை மாலை உள்ளடங்களாக இரு தடவைகள் 20 நிமிடங்களுக்கு குளிப்பதானது நோய் நிலையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
இதேவேளை, தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திபேதி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්