வகைப்படுத்தப்படாத

வத்தளை, களனி பிரதேசங்களில் நாளை நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – வத்தளை மற்றும் களனி பிரதேசங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு புணரமைப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 9.00 மணிவரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய களனி, பெஹலியகொடை, வத்தளை நகரசபை அதிகார பிரதேசங்கள் மற்றும் ஹெந்தலை பகுதியிலும் இந்த 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில்

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு