(UTV | கொழும்பு) – சவுதி அரேபியாவில் மாணவர்கள் முறையான காரணம் இன்றி 20 நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு சமூகமளிக்காவிடின் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி இந்த கடும் நடவடிக்கை நாட்டின் சிறுவர் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்றதாகவும், எதிர்வரும் கல்வியாண்டில் கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது,பெற்றோர்கள் கைதாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவர் எனவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு மாணவர் 20 நாட்களுக்கு ஒரு முறையான காரணமின்றி பாடசாலைக்கு வராமல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் பாதுகாவலர் நாட்டின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணையின் பின் வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாணவர் நீண்ட காலமாக இல்லாதது குறித்து பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கவனக்குறைவு ஏற்பட்டால், அதற்குரிய சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්