(UTV | கொழும்பு) – ‘சி யான் 06’ எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கையின் எல்லைக்குள்ள ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் மற்றும் சீனத் தூதரகம் வெளிவிவகார அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலுடன் இணைந்து நாரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கப்பல் இலங்கைக்கு வரும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්