(UTV | கொழும்பு) –
நாடாளுமன்றத்தின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் பணிப்பெண்கள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் மேலும் சில ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் தலைவர்கள் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் அறிக்கை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, குறித்த துறையின் உதவி வீட்டுப் பணிப்பெண் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பல ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளதாக ஊழியர்களின் சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிராக தகுதி பாராமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் சமீபத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්