உள்நாடு

மட்டக்களப்பு, கிரான்குளத்தில் திடீர் தீ – முயற்சித்தும் கட்டுப்படுத்தமுடியவில்லை மக்கள் கவலை

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பில் மண்முனைப்பற்றுப் பிரதேசத்துக்கு உட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் கடற்கரையை அண்மித்துள்ள தோட்டங்களில் நேற்று வெள்ளிக்கிழமை (25) திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் காணப்பட்ட மிகவும் பயன் தரும் தென்னை, பனை, உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அவ்வேளை விவசாயிகள் ஒன்றிணைந்து முயற்சித்தபோதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

அதனையடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்து திட்டமிட்டோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ ஏற்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முகக்கவசங்களுக்கு புதிய கட்டுப்பாடு விலை

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – 05 பேர் மீண்டும் விளக்கமறியலில்

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி