(UTV | கொழும்பு) –
இங்கிலாந்தில் முதல்முறையாக கருப்பை மாற்று சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
சகோதரி வழங்கிய கர்ப்பப்பையை பயன்படுத்தியே இந்த கருப்பை மாற்று சத்திரகிசிச்சை இடம்பெற்றுள்ளது.
ஒக்ஸ்போர்ட்டின் சேர்ச்சில் ஹொஸ்பிட்டலில் இந்த சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 9 மணித்தியால சத்திரகிசிச்சையின் போது சகோதரியின் கருப்பையை அவரது 34 வயது உடன்பிறப்பிற்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சகோதரியின் கருப்பையை அகற்ற 8 மணித்தியாலங்களானது என இந்த சத்திரசிகிச்சைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் ரிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது நம்பமுடியாததாகயிருந்தது,எனது அறுவை சிகிச்சை வாழ்க்கையில் இது மிகவும் மன அழுத்தமான வாரமாகயிருக்கலாம் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையானதாகயிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருப்பையை வழங்கியவரும் பெற்றுக்கொண்டவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருப்பையை தானமாக பெற்றவர் என்ற நோயினால் பாதிக்கப்பட்டார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன,கருத்தரிப்பதற்காக ஐவிஎவ் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளும் நோக்கில்அவர் தனது கருக்களை சேமித்துவைத்தார் ஆனால் இரண்டு குழந்தைககளின் தாயான அவரது சகோதரி கருப்பை மாற்று சத்திரசிகிச்சைக்காக கருப்பையை தானம் செய்துள்ளார்.
கருப்பையை தானமாகபெற்றவரின் கருப்பை வெற்றிகரமாக செயற்படுகின்றது மற்றுமொரு சத்திரசிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
இந்த கருப்பை சத்திரகிசிச்சை ஐந்துவருடங்களிற்கு நீடிக்கும் அதன்பின்னர் கருப்பை அகற்றப்படவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්