அரசியல்உள்நாடுவிளையாட்டு

ஹேஷா விதானகேவிற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

(UTV | கொழும்பு) –  நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தொடர்பில் அவதூறாக கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் குறித்த நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தனது அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வுக்கு அமைய, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய விசேட கணக்காய்வு வரைவு ஊடகங்கள் ஊடாக வௌிப்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள், பொய்யானவை மற்றும் அவதூறானவை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு கீழ் செயற்படும் அனைவருக்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தண்ணீர் கலந்த எண்ணெய் பவுசர் குறித்து உடனடி விசாரணை

கிழக்கு மாகாணத்தில் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு – மின்சக்தி அமைச்சர் இணக்கம்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டது

editor