(UTV | கொழும்பு) – இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருக்குமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கக் கூட்டத்தில் காணொளியொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நாணய ஆதரவு மற்றும் நீண்ட கால முதலீடு ஆகிய நான்கு முக்கிய துறைகளில் இந்தியா-இலங்கை உறவுகள் மேலும் மேம்படுத்தப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டார்.
இதேவேளை சபாநாயகர், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக பரிமாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு இந்தியா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්