உள்நாடு

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவிக்கின்றது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்டரோ (strow),கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், இடியப்ப தட்டு, மாலைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒக்டோபர் மாதம் முதலாம் முதல் தடை விதிக்கப்படவுள்ளது. இதன்படி, நாட்டினுள் அவற்றின் உற்பத்தி, உள்ளூர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் , இலவசமாக வழங்குதல் அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் கருத்துக்கணிப்பில் சஜித் முன்ணிலை

சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

அடுத்த இரு நாட்களில் குறைவடையும் மழைவீழ்ச்சி – பிரதீபராஜா