(UTV | கொழும்பு) –
இலங்கை நாட்டவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை,தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதாக கூறியுள்ளார்.
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின்முன் நிறுத்த வேண்டுமென்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூதரக ரீதியில் இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්