(UTV | கொழும்பு) –
சர்ஜூன் அபுபக்கர் கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள சுற்றுலாத்துறை அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண கெளரவ ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களினால். நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கான நியமனக் கடிதம் அன்மையில் திருகோனமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் வைத்து ஆளுனரினால் வழங்கப்பட்டது.
ஜனாப் சர்ஜூன் தனது இளமைக் பருவத்திலிருந்தே பல பதவிகளில் சேவையாற்றியுள்ளார். இவர் பல்வேறு அமைச்சுக்குள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் சிபார்சின் பேரிலும் கிழக்கு சுற்றுலாத்துறை சபையின்் உப தலைவர், மற்றும் கிழக்கு மாகணத்தின் முதலீடு பொருளாதார கொன்வன்சன் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு அத்துறையில் திறம்பட சேவையாற்றினார். . . முன்னாள் பிரதமர் அலுவலகத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான நனசல ஜ,.சீ.ரீ. தொழில் நுட்ப தகவல் நிலையங்களை கிழக்குக்கு அமைப்பதற்கு திட்ட இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடமைப்பு நிர்மாணத்துறை கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்கள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தின் கீழ் உள்ள நிமோ தேசிய இயந்திர பொறியியல் நிறுவனத்திலும் பணிப்பாளர் சபை உறுப்பிணராகவும் பணியாற்றினார். சுற்றுலாத்துறை வனவள கிரிஸ்த்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் ஸ்ரீலங்கா கொன்வென்சன் நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பிணராகவும் நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். . அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சில் சுகதாஸ விளையாட்டு கொம்பளக்ஸின் பணிப்பாளர் சபை உறுப்பிணர் அத்துடன் உள்ளுராட்சி மாகண சபை அமைச்சர் பைசர் முஸ்தாபா சிபார்சின் பேரில் உள்ளுராட்சி கடன் திட்ட கமிசனிலும் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார் . அத்துடன் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் ஹாசிம் அவர்களின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் தனது முதுமானி கலை மற்றும் சரவ்தேச உறவுகள் பற்றிய பட்டப்படிப்பினையும் தனியார் வெட் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார். அத்துடன் , மனித வளங்கள், முகாமைத்துவ உயர் டிப்ளோமா பட்டப்படிப்பையும் கற்று தேர்ந்துள்ளார். அவர் தனது உயர்கல்வியை இளமைக் காலத்தில் அவுஸ்திரேலியாவுக்குச சென்று அங்கு ஹோட்டேல் முகாமைத்துவமும் மற்றும் சுற்றுலாத்துறை சம்பந்தமான பட்டப்படிப்பினை கற்றிருந்தார். தனது ஆரம்பக் கல்வியை கல்முனை சாஹிரா கல்லுாரியிலும் மற்றும் கல்முனை காமேல் பற்றிமாக் கல்லுாரியிலும் கல்வி பயின்றுள்ளார்…. அவர் வியாபார முகாமைத்துவ அபிவிருத்தி முகாமையாளராக அபான்ஸ் தனியார் கம்பனியிலும் பணியாற்றினார். அத்துடன் அமேரிக்கா, ஜரோப்பிய தெற்காசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நல்லென்னத் துாதுவராகவும் கல்விக், சுற்றுலா, போன்ற கருத்தரங்குகளுக்கு பல்வேறு நாடுகளுக்கும் பிரயானம் , மற்றும் சர்வதேச கருத்தரங்களிலும் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறி்பிடத்தக்கது.
இவர் சாய்ந்தமருது அபான்ஸ் விற்பனை நிலைய உரிமையாளர் காலம் சென்ற அபுபக்கரின் அவர்களின் ஏக புதல்வர் ஆவார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්