உள்நாடு

பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பணமில்லையா – சஜித் பிரேமதாச கேள்வி.

(UTV | கொழும்பு) –

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு,விவசாயம் மற்றும் மின்சார உற்பத்திக்கு போதிய நீர் இன்மை, வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு,வறட்சியால் புல்வெளிகள் வறன்டு போவதனால் கால்நடை வளர்ப்பு என பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றும்,இது தேசிய முக்கியத்துவம்  பிரச்சினை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால்,பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதைத் தாண்டி ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும்,இதற்கு பணம் இல்லை என்றால், 2020 ஒக்டோபர் 14 முதல் 2021 பெப்ரவரி 20 வரை சீனி இறக்குமதிக்கான விசேட பண்ட வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைக்கப்பட்டதாகவும்,அந்த நேரத்தில், 400,000 மெட்ரிக் டொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டதாகவும்,இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 15.9 பில்லியன் ரூபா என்றும், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நாட்டுக்கு இழந்த பணத்தை மீட்டு வறட்சியான காலநிலையினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரட்சியான காலநிலையினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேள்விகளை எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கு தண்ணீர் முன்னுரிமை குறித்து சரியான தெளிவு இல்லை என்றும், எனவே இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அத்துடன் விவசாயிகளின் நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவது தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும்,ஒரு கிலோவுக்கு 80 முதல் 85 ரூபா வரையான தொகை வழங்கப்படுவதானது செலவை ஈடுகட்டுவதற்கும் போதுமானதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தியா பறந்தார் ரணில்!

போராட்டத்தில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

வட, கிழக்கு ஹர்த்தாலுக்கு தமிழரசு பூரண ஆதரவு – சுமந்திரன்.