அரசியல்உலகம்உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்.

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் பிரகாரம், காபன் வெளியேற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் சிங்கப்பூரில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி

இன்று முக்கியமான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.