உள்நாடுவணிகம்

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

(UTV | கொழும்பு) –

நாட்டில் இந்த ஆண்டின் 8 மாத காலப்பகுதிக்குள் ஆடைக் கைத்தொழிலுடன் தொடர்புடைய நிறுவனங்களில் தொழில்புரிந்து வந்த சுமார் 20 ஆயிரம் பேர் தொழிலை இழந்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை சங்கம் அறிவித்துள்ளது.
அத்தோடு இக் காலப்பகுதிக்குள் நாட்டில் பாரியளவிலான 7 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்தோடு கைத்தொழிற்சாலைகளின் எதிர்பார்க்கப்பட்ட நாளாந்த உற்பத்திகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன என சங்கத்தின் இணைச் செயலாளர் எண்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரியளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் குறித்த தொழிற்சாலை களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் பல மூடப்பட்டு வருவதாகவும் வெளிநாடுகளிலிருந்து உற்பத்திக்கான கேள்வி கிடைக்காததால் ஆடைக் கைத்தொழில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இதனால் சுமார் 20ஆயிரம் பேர்வரை தொழிலை இழக்க நேரிட்டுள்ளது. இதனால் அரச கைத்தொழில் நிறுவன உரிமையாளர்களை ஒன்றிணைத்து ஓடர்களை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறைந்தளவிலான உற்பத்திக் கேள்வியே கிடைக்கப்பெறுவதால் சில நிறுவனங்களில் தொழில்புரியும் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரமே வழங்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை மாத்திரம் கொண்டு வாழ்க்கையை கொண்டுச் செல்லமுடியாதுள்ளது என்பதால் பணியாளர்கள் தொழிலை விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் மக்களின் மனித உரிமை மீறல், அரசு அடக்குமுறை, முறையான வழிமுறை இல்லாமல் தொழில் சட்டவிதிமுறைகளை மாற்ற முயற்சித்தல், ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியத்திலிருந்து அரசு பெற்றுக்கொண்ட கடனுக்கான வட்டியை குறைப்பது தொடர்பில் உலகநாடுகளின் அவதானம் திரும்பியுள்ளதாகவும் ஓடர்கள் குறைந்துள்ளதால் மேற்கண்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாக்லேட் ஒன்றினுள்- மனித கைவிரல் கண்டுபிடிப்பு : மஹியங்கனையில் சம்பவம்

கடலில் மூழ்கி தென்கொரிய நாட்டு பெண் பலி.

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் திருநாள் இன்று