உள்நாடு

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!

(UTV | கொழும்பு) –

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு உணவகங்களில் திடீர் சோதனை இடம்பெற்றது.
தற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் உணவகம்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார்.

மேலும், இதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நீரில் கழுவாமல் வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் சீர்குலைந்து காணப்பட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. எனவே, இதனை தடுக்கும்பொருட்டும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதை கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 0672250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்றார்.

இச்சோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல். எம். றயீஸ் தலைமையில் பொது சுகாதார் பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து சிறைச்சாலைகளும் PCR பரிசோதனைக்கு தயார் நிலையில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!